அமைச்சரான பின் டீ போட்டுக் கொடுத்து அரசுப் பணியை துவங்கியது மகிழ்ச்சி அளிப்பதாக சிறுபான்மைத் துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான் தெரிவித்தார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு தற்போது அமைந்திருக்கும் நிலையில், முதல் அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின்பு கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் அமைச்சர்கள் தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறுபான்மை துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் துறை அமைச்சர் செஞ்சி கேஎஸ். மஸ்தான், செஞ்சியில் உள்ள டீக்கடையில் பொதுமக்களுக்கு டீ போட்டுக் கொடுத்து தனது அரசு பணியை துவங்கினார். அவர் டீ கடையில் பணியாற்றியதன் நினைவாக பொதுமக்களுக்கு அமைச்சர் ஆனதும் டீ போட்டு கொடுத்ததாக தெரிவித்தார்.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தை கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்றவும், அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு உத்தரவை முழுமையாக அமல்படுத்தி கண்காணிக்க அமைச்சர் இன்று செஞ்சி பேரூராட்சி செஞ்சி அரசு மருத்துவமனை மற்றும் செஞ்சியை அடுத்துள்ள சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.
முதன்முறையாக அமைச்சர் பதவி ஏற்று பொதுமக்களுக்கு டீ போட்டுக் கொடுத்து அரசு பணியை துவங்கியது மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்