Bike Wheeling புதிய தலைமுறை
தமிழ்நாடு

‘சொன்னா கேக்க மாட்டிங்களாப்பா...?’ - விபரீதத்தை உணராமல் வீலிங் செய்த இளைஞர்கள்!

சமூக வலைதளங்களில் கிடைக்கும் லைக்குகளுக்காகவும், சிறிது நேர உற்சாகத்துக்காவும் விபரீதத்தை உணராமல் வீலிங் என்ற பெயரில் வில்லங்கத்தில் இளைஞர்கள் ஈடுபடுவது அதிகரித்து வருகின்றது.

webteam

ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், பொது இடத்தில் பாதுகாப்பின்றி இளைஞர்கள் வீலிங் செய்யும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருவது கவலை அளிக்கத்தான் செய்கிறது. சமீபத்தில்கூட திருச்சியில் தீபாவளியன்று இருசக்கர வாகனத்தில் பட்டாசுகளை வைத்துக் கொண்டு வீலிங் செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

Bike Adventure

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் இளைஞர் ஒருவர் வீலிங் செய்து அதனை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இளைஞர் வீலிங் செய்யும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவிய நிலையில் காவல்துறையின் கண்ணில் சிக்கவே, வீலிங் செய்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடிவருகின்றனர்.

அந்த வீடியோவில் விதவிதமான வண்ணங்களில் உடை அணிந்து வீலிங் செய்யும் ஒரு இளைஞர், கைகளை விட்டவாறு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலையில் இருசக்கர வாகனங்களை இயக்கிறார். இதுபோன்று பல வீடியோக்களை பதிவு செய்துள்ளார் அவர்.

தீபாவளி அன்றும்கூட இருசக்கர வாகனத்தில ஆபத்தான முறையில் பட்டாசுகளை வெடிக்கச் செய்து விபரீதத்தில் ஈடுபட்டுள்ளளார். இதையடுத்து இளைஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.