தமிழ்நாடு

செங்கல்பட்டு: 6 மணிநேரம் பூட்டப்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலையம் - காத்திருந்த காவலர்கள்

செங்கல்பட்டு: 6 மணிநேரம் பூட்டப்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலையம் - காத்திருந்த காவலர்கள்

kaleelrahman

செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையம் இன்று காலை முதல் 6 மணிநேரம் பூட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு பெண் ஆய்வாளர் உட்பட 16 பெண் காவலர்களும் ஒரு உதவி ஆய்வாளரும் பணிபுரிந்துவருகின்றர். இந்த நிலையில் மறைமலைநகரில் போக்சோ வழக்கு தொடர்பாக நிதிமன்றத்துக்கு அழைத்துவர மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ராஜாமணி அருள்மொழி தேவி, இன்று அதிகாலையில் புறப்பட்டுள்ளார்.

இந்த வழக்குக்குத் தேவையான ஆவணங்களை காவல்நிலையத்திலிருந்து எடுத்துச்செல்ல வந்தபோது, சக பெண் காவலர்களை விரைவாக வரும்படி கூறியுள்ளார். காலை 6 மணியான போதும் சக காவலர்கள் வராததால் ஆத்திரமடைந்த பெண் ஆய்வாளர் காவல் நிலையத்தை பூட்டிவிட்டு சாவியை எடுத்துகோண்டு மறைமலைநரகர் காவல் நிலையத்துக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து நீண்ட நேரம் கழித்து சக பெண் காவலர்கள் மகளிர் காவல் நிலையத்திற்கு வெளியே கால்கடுக்க காத்துக்கிடந்தனர். இவர்களுடன் மனு அளிக்க வந்த பெண்களும் நீண்டநேரமாக காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர், 12 மணிக்கு காவல் நிலையத்திற்கு வந்த பெண் ஆய்வாளர், காவல்நிலைய சாவியை காவலர்கள் முன்னே தூக்கி எரிந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் காவல்நிலையம் திறக்கப்பட்டது. காலை முதல் 6 மணிநேரம் அனைது மகளிர் காவல்நிலையம் பூட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.