அரசு பேருந்தில் ஏற்பட்ட தகராறில் பயணி தாக்கியதில் பேருந்து நடத்துனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்தில், மதுராந்தகம் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தத்தில் மதுபோதையில் ஒருவர் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது நடத்துனர் பெருமாள் அவரிடம் டிக்கெட் கேட்டுள்ளார். டிக்கெட் எடுக்க முடியாது என மது போதை ஆசாமி தெரிவித்ததை அடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், போதையில் இருந்த நபர் தாக்கியதில் நடத்துனர் மயங்கி விழுந்துள்ளார் இதைக்கண்ட அந்த நபர் பேருந்தில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார். இதைத் தொடர்ந்து காயம் அடைந்த நடத்துனர் பெருமாளை (54) சிகிச்சைக்காக மேல்மருவத்தூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர.; மேலும் நடத்துனரை அடித்துவிட்டு தப்பியோடிய நபர் சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்த முருகன் 35 என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்