தமிழ்நாடு

வேதியியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமன வழக்கு : புது பட்டியலை தயாரிக்க உத்தரவு

வேதியியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமன வழக்கு : புது பட்டியலை தயாரிக்க உத்தரவு

webteam

தமிழக பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள முதுகலை வேதியியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக புது தேர்வு பட்டியலை தயாரிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள 356 முதுகலை வேதியியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று 2019 ஜூன் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பாணை வெளியிட்டது.

இந்த தேர்வில், அதிக மதிப்பெண் பெற்றவர்களை பொது பிரிவில் சேர்க்காமல், மிகவும் பிற்படுத்த மற்றும் சீர் மரபினருக்கான இட ஒதுக்கீட்டில் நியமிக்கும் வகையில் வெளியிடப்பட்ட தற்காலிக தேர்வு பட்டியலை ரத்து செய்யக்கோரி சோபனா உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தேர்வு பட்டியலை மறுபரிசீலனை செய்து, புதிய தேர்வு பட்டியலை இரண்டு வாரங்களுக்குள் தயாரிக்கவேண்டும் எனவும் அதில் பின்னடைவு காலி பணியிடங்களை முதலில் நிரப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும், அதற்கு பின்னரே தற்போதைய காலி பணியிடங்களை நிரப்பவேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.