வேதியியல் ஆய்வாளர் சுபத்திரா  புதிய தலைமுறை
தமிழ்நாடு

எண்ணூர் வாயுக்கசிவு - அமோனியா எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்? வேதியியல் ஆய்வாளர் விளக்கம்

“காற்றுடன் கலந்து நம் சுவாசத்தின் வழியாக உடலுக்குள் அமோனியா செல்லும்போது மயக்கம் ஏற்படும். மேலும் அது நுரையீரலை சரியாக செயல்பட விடாமல் தடை செய்து, ஆக்சிஜனை உள்ளே செல்ல விடாது” - வேதியியல் ஆய்வாளர் விளக்கம்

PT WEB

எண்ணூர் ஆலையில் வாயுக் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு இருக்கும் மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

இது குறித்து வேதியல் ஆய்வாளர் சுபத்திரா ராஜேந்திரன் நம்மிடையே பேசும்பொழுது, ”காற்றுடன் கலந்து நம் சுவாசத்தின் வழியாக உடலுக்குள் அமோனியா செல்லும்போது நமக்கு மயக்கம் ஏற்படும். மேலும் அது நுரையீரலை சரியாக செயல்பட விடாமல் தடை செய்து, ஆக்சிஜனை உள்ளே செல்ல விடாது.

விவசாயத்திற்கு அமோனியாவின் தேவையானது இப்பொழுது அதிகரித்து வருகிறது. வருங்காலத்தில் அது இன்னும் அதிகரிக்கும். அதேநேரம் இப்போது ஏற்பட்ட இந்த கசிவானது நமக்கு ஒரு எச்சரிக்கை.

இது வெடித்தால் பூதாகரமாக பல ஆபத்துகளை விளைவிக்கும். தற்போதும் பாதிக்கப்படவர்களை தனிமைப்படுத்திவைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்என்றார். இது குறித்து இவர் தரும் விளக்கத்தை முழுமையாக தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் வீடியோவை பார்க்கலாம்.