தமிழ்நாடு

கன்றுக்குட்டியை அடித்துக்கொன்ற சிறுத்தை - அச்சத்தில் மக்கள்

கன்றுக்குட்டியை அடித்துக்கொன்ற சிறுத்தை - அச்சத்தில் மக்கள்

webteam

வேலூரில் கன்றுக்குட்டியை சிறுத்தை அடித்துக் கொன்ற சம்பவம் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த அரங்கல் துருகம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பழனி. இவர் தனது மனைவி கீதாவுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கால்நடைகளை வைத்து அவர்கள் விவசாயம் செய்து வந்தனர். நேற்று நள்ளிரவு இவர்களின் இடத்திற்குள் வந்த சிறுத்தை ஒன்று, அங்கிருந்த கன்றுக் குட்டியை அடித்துக் கொன்றுள்ளது. இதைக்கண்ட பழனி உடனடியாக ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். 

தகவலைத் தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு வந்து, கன்றுக்குட்டியை பிரேத பரிசோதனை செய்தனர். சிறுத்தை கன்றுக்குட்டியை அடித்துக்கொன்ற சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் பீதியில் உள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக பொண்ண பள்ளி, அபிகிரிபட்டரை ஆகிய பகுதிகளில் சிறுத்தை சுற்றித் திரிந்தது. 

இதனால், பொண்ண பள்ளி பகுதியில் இரண்டு கூண்டுகளை வைத்து வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் அருகாமையிலுள்ள அரங்கல் துருகம் பகுதியில் சிறுத்தை தற்போது ஒரு கன்றுக்குட்டி அடித்துக் கொன்றுள்ளது.