தயாரிப்பாளர் சதீஷ்குமார் pt desk
தமிழ்நாடு

செக் மோசடி வழக்கு: தங்க மீன்கள் பட தயாரிப்பாளர் சதீஷ் குமாருக்கு 18 மாதம் சிறை!

செக் மோசடி வழக்கில் சினிமா தயாரிப்பாளருக்கு 18 மாத சிறை தண்டனை விதித்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

webteam

செய்தியாளர்: V.M.சுப்பையா

தங்க மீன்கள், புரியாத புதிர், குற்றம் கடிதல், தரமணி உள்ளிட்ட பல சினிமா படங்களை தயாரித்தவர் ஜெ .சதீஷ்குமார். இவர் ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை வைத்துள்ளார். இந்த நிறுவனத்தின் பெயரில் சினிமா தயாரிக்க பிரபல பைனான்சியர் ககன் மோத்ராவிடம் ரூ.2 கோடியே 60 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதற்காக காசோலையை தயாரிப்பாளர் சதீஷ்குமார் வழங்கியுள்ளார்.

தயாரிப்பாளர் சதீஷ்குமார்

இந்நிலையில், இந்த காசோலையை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை என்று திரும்பி வந்துள்ளது. இதையடுத்து சதீஷ்குமார் மீது ககன் போத்ரா 3 செக் மோசடி வழக்கை சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுன் 4 வது குற்றவியல் கோர்ட் நீதிபதி சந்திர பிரபா, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி நேற்று தீர்ப்பளித்தார்.

அந்த தீர்ப்பில் காசோலை மோசடி வழக்கில் தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமாருக்கு 3 வழக்குகளில் தலா 6 மாதம் என மொத்தம் 18 மாதங்கள் சிறை தண்டனையும் ரூ 2 கோடியே 60 லட்சம் ரூபாய் இழப்பீடும் 3 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.