வளிமண்டல கீழடுக்கு சுழற்சி PT
தமிழ்நாடு

தமிழகத்தில் 30ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு! - மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

தமிழகத்தின் ஒரு சில இடங்களில் டிசம்பர் 25 முதல் 30 ஆம் தேதி வரையில் மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PT WEB

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது தொடர்ந்து இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவி வருவதால் வரும் திங்கள் முதல் டிசம்பர் 30 வரையிலான 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வங்கக்கடல் பகுதிகளில் வரும் திங்கள் முதல் டிசம்பர் 28 ஆம் தேதி வரையில் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.