தமிழ்நாடு

டிசம்பர் 2 முதல் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

டிசம்பர் 2 முதல் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

kaleelrahman

தமிழகத்தில் வரும் டிசம்பர் 2ஆம் தேதி அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


நிவர் புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட வடு மறைவதற்குள் அடுத்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், தாமதமாக அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 2ஆம் தேதி தென் தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் வரும் 2ஆம் தேதி தமிழகத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக, தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளாவிற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வடதமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது