தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

webteam

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, “அடுத்த 3 மணி நேரத்தில் நாமக்கல், கரூர், தருமபுரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதே போல கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. நாளை மறுநாள் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.” என அதில் சொல்லப்பட்டுள்ளது.

முன்னதாக, தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.