தமிழ்நாடு

வடதமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

வடதமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Rasus

வடதமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அரபிக்கடல் மற்றும் வங்கக் கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று வீசி வருகிறது. மத்திய வங்கக் கடலில்‌ வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனால் அடுத்த 24 மணி நேரத்தில் வடதமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆ‌ய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வந்ததால் மக்கள் கடுமையாக அவதியுற்றனர். இதனிடையே கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வந்தது. சென்னையின் பல இடங்களிலும் கடந்த வாரம் லேசான மழை பெய்தது.