ராமநாதபுரத்தில், மகளிர் அமைப்பு சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கைகலப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் மகளிர் அமைப்பு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். அப்போது, நலத்திட்ட உதவிகளை வழங்க இருந்த மகளிர் அமைப்பு, ஒரு கோடி ரூபாய் பண மோசடி செய்ததாகக் கூறி சிலர் திருமண மண்டபத்தில் முழக்கமிட்டனர்.
பின்னர் விழா மேடையில் ஏறி, அங்கிருந்த நாற்காலிகளை வீசி கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தகராறில் ஈடுபட்ட சிலரை, காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.