தேர்தலில் போட்டியிடும் அமைச்சர்கள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

மக்களவை தேர்தல் 2024 | நிதின் கட்கரி முதல் எல்.முருகன் வரை... களம் காணும் மத்திய அமைச்சர்கள் லிஸ்ட்!

நடக்க இருக்கின்ற முதற்கட்ட மக்களவை தேர்தலில் களம் காணும் மத்திய அமைச்சர்கள் யார் யார், அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

PT WEB

தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 102 தொகுதிகளில் முதற்கட்ட மக்களவை தேர்தல் நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதில் 8 மத்திய அமைச்சர்கள் களம் காண்கின்றனர். யார் யார், எங்கிருந்து போட்டியிடுகின்றனர் என பார்க்கலாம்...

1) மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் தொகுதியிலிருந்து மூன்றாவது முறையாக களம் காண்கிறார்.

2) கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் அசாம் மாநிலம் திப்ருகர் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார்.

3) மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அருணாச்சல் பிரதேசம் மேற்கு தொகுதியில் நான்காவது முறையாக போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து முன்னாள் அருணாச்சல் பிரதேச முதலமைச்சர் நவந்துகி போட்டியிடுகிறார்.

4) உத்தரப்பிரதேசமாநிலம் முசாஃபர் நகர் தொகுதியிலிருந்து மத்திய இணை அமைச்சர் சஞ்சீவ் பலியான் களம் காண்கிறார். இவரை எதிர்த்து போட்டியிடும் சமாஜ்வாடி வேட்பாளர்கள் கடும் சவாலாக இருக்கின்றனர்.

5) மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், காஷ்மீர் உதம்பூர் தொகுதியிலிருந்து மூன்றாம் முறையாக போட்டியிடுகிறார். சுமார் 20,000 பரப்பளவில் உள்ள இந்த தொகுதி இந்தியாவிலேயே மிகப்பெரிய தொகுதி என்பது குறிப்பிடப்பட்டது.

6) மத்திய சுற்றுசூழல் அமைச்சர் பூபேந்திரயாதவ் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியில் போட்டியிடுகிறார்.

7) மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால், ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

8) தமிழ்நாட்டில் நீலகிரி தொகுதியிலிருந்து பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை எதிர்த்து போட்டியிடுகிறார்.

இவர்களில் யார் யார் தேர்தலில் வெற்றிப்பெற போகின்றனர் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்!