தமிழ்நாடு

கீழடி, ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகள் - மத்திய அரசு அனுமதி

கீழடி, ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகள் - மத்திய அரசு அனுமதி

webteam

கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை ஆகிய பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தின் சிவகங்கையில் உள்ள கீழடியில் 5-கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான தொன்மைப் பொருட்கள், வரலாற்றுப் பதிவுகள், பண்டைகால நாகரிகம் உள்ளிட்டவை குறித்து கண்டுபிடிக்கப்பட்டன. குறிப்பாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பழமையான பொருட்கள் ஏராளமாக கண்டெடுக்கப்பட்டன.

இதனால் தமிழகத்தின் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வுப் பணிகளை தொடர மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை உள்ளிட்ட பகுதிகள் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.