தமிழ்நாடு

செல் கவுண்டிங் கருவிகள் இல்லாததால் நோயாளிகள் அவதி

Rasus

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் இரத்த அணுக்களின் எண்ணிக்கையை கண்டறியும் கருவிகள் இல்லாததால், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் தலைமை அரசு மருத்துவமனை உள்ளது. இதனால் தொகுதி முழுவதிலும் உள்ள மக்கள்  அதிக அளவில் தினமும் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். தற்போது வேகமாக பரவி வரும் காய்ச்சலால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக தனிப்பிரிவு ஒதுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் என்று வருகின்றவர்களுக்கு உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கையை கண்டறிந்தால் மட்டுமே சரியான சிகிச்சை அளிக்க முடியும். ஆனால் அதனை கண்டறியும் கருவி இங்கு இல்லை. ஆகவே விரைவில் ரத்த அணுக்களின் எண்ணிக்கையை கண்டறியும் கருவியை ராதாபுரம் தலைமை மருத்துவமனைக்கு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.