தமிழ்நாடு

சாத்தான்குளம் விவகாரம்: மதுரை சிபிஐ அலுவலகத்தில் 2வது நாளாக விசாரணை

சாத்தான்குளம் விவகாரம்: மதுரை சிபிஐ அலுவலகத்தில் 2வது நாளாக விசாரணை

webteam

சாத்தான்குளம் விவகாரத்தில் மதுரை சிபிஐ அலுவலகத்தில் 2-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

சாத்தான்குளம் தந்தை மகன் சித்ரவதை கொலை வழக்கு தொடர்பாக கடந்த 10-ம் தேதி முதல் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் முதல்கட்டமாக கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகிய 5 பேரை வரும் நாளை வரை சிபிஐ காவலில் எடுத்து விசாரணை செய்ய மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

இதனைத் தொடர்ந்து நேற்று மதியம் முதல் மதுரை ஆத்திக்குளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து 5 பேரிடமும் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காவலர் முத்துராஜை நேற்று இரவு சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் மீண்டும் சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்து வந்து தற்போது மீண்டும் 5 பேரிடமும் விசாரணையை தொடங்கி உள்ளனர். இன்று 5 பேரையும் சாத்தான்குளம் அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.