தமிழ்நாடு

”பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை விசாரிப்போம்” - சிபிசிஐடி ஐஜி சங்கர் பேட்டி

”பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை விசாரிப்போம்” - சிபிசிஐடி ஐஜி சங்கர் பேட்டி

webteam

சாத்தான்குளம் சம்பவம் நடந்த அன்று பணியாற்றிய பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை விசாரிப்போம் என சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் தெரிவித்துள்ளார்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் பி.என் பிரகாஷ், புகழேந்தி அமர்வு விசாரணை செய்து வருகிறது. அதன்படி இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் வரை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் எனவும் சிறிதளவும் தாமதம் ஏற்படுத்தக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதன்படி விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி ஜெயராஜ் வீடு, கடை ஆகிய இடங்களில் ஆய்வு செய்து பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்துப் பேசிய சிபிசிஐடி ஐ.ஜி சங்கர், தந்தை, மகன் கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய காவலர் முத்து ராஜ் இரண்டு நாட்களுக்குள் பிடிபடுவார். அவரை தேடி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்,சம்பவம் நடந்த அன்று பணியாற்றிய பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை விசாரிப்போம். இவ்வழக்கில் சிபிசிஐடி நியாயமாக விசாரித்து வருகிறது.இதில் அரசியல் தலையீடு இல்லை. கண்காணிப்பு கேமராக்களில் பதிவான சில பதிவுகள் கிடைத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்