தமிழ்நாடு

நீரில் மூழ்கி தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த விவசாயிகள்!

நீரில் மூழ்கி தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த விவசாயிகள்!

webteam

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் ஈடுபடவுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, காவிரி நீர் பங்கீட்டிற்காக மத்திய அரசு வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்தது. அத்துடன் காவிரி வழக்கில் 9 பேர் கொண்ட அமைப்பு உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இன்றைய விசாரணையில் தீர்ப்பு வழங்கப்படும், காவிரி நீர் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தமிழக விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அனைத்து விவசாயிகள் சங்க கூட்டியக்கத்தினர் ஏற்கனவே அறிவித்திருந்தது போல நாளை மறுநாள், நாகை புதிய கடற்கரையில் தற்கொலை செய்துகொள்ளும் போரட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்த தகவல் காவல்துறையினருக்கு தெரியவர, ஏராளமான கடலோர பாதுகாப்பு காவல்துறையினர் நாகையில் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நாகை கடலோரப் பகுதியை தீவிர கண்காணிப்பிற்குள் கொண்டுவந்துள்ளனர். இருப்பினும் நாளை மறுநாள் திட்டமிட்டபடி தற்கொலை போராட்டம் நடத்துவது என விவசாயிகள் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.