சாதிவாரி கணக்கெடுப்பு முகநூல்
தமிழ்நாடு

சாதிவாரி கணக்கெடுப்பு - தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றம்!

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம், சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

PT WEB

சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அது ஒருமனதாக நிறைவேற்றவும்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

இதுகுறித்து பேரவையில் பேசிய முதல்வர், "நாட்டு மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய அனைத்திலும் சம உரிமையும், சம வாய்ப்பும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், சட்டங்களை இயற்றுவதற்கு சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம் என்று தமிழக அரசு சார்பாக வலியுறுத்தி வருகிறோம். ஆகவே, 2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு உடனே தொடங்க வேண்டும். அதனுடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்த வேண்டும்” என மத்திய அரசை வலியுறுத்துவதினார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பாமக போன்ற கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சூழலில், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.