தமிழ்நாடு

பொங்கல் பரிசு: 'ரொக்கத் தொகை' வார்த்தை நீக்கம் - புதிய சுற்றறிக்கை

பொங்கல் பரிசு: 'ரொக்கத் தொகை' வார்த்தை நீக்கம் - புதிய சுற்றறிக்கை

Sinekadhara

மண்டல பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் அனுப்பிய சுற்றறிக்கையில் இடம்பெற்றிருந்த ரொக்கத்தொகை என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 21 பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நேற்றைய தினம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், எக்காரணம் கொண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் இல்லை என்ற நிலை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மேலும், பரிசுத் தொகுப்புடன் ரொக்கத்தொகை வழங்கப்படுவதை நாள்தோறும் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த சுற்றறிக்கையால் குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், மண்டல பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் அனுப்பிய சுற்றறிக்கையில் இடம்பெற்றிருந்த ரொக்கத்தொகை என்ற வார்த்தை தற்போது நீக்கப்பட்டுள்ளது.