தமிழ்நாடு

தமிழகத்தையும் தாக்கிய பணத்தட்டுப்பாடு: பணத்திற்காக அலையும் மக்கள்..!

தமிழகத்தையும் தாக்கிய பணத்தட்டுப்பாடு: பணத்திற்காக அலையும் மக்கள்..!

Rasus

தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலையில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் இல்லை. இதனால் தமிழக மக்களும் அவதியுற்றுள்ளனர்.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ஒரே இரவில் திடீரென இந்த அறிவிப்பு வெளியானது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் மக்கள் தங்கள் கைகளில் இருந்த பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நோட்டுகளை மாற்ற முடியாமல் சிரமப்பட்டனர். ஏடிஎம்கள், வங்கிகள் என எங்குமே பணம் இல்லாததால் பொதுமக்கள் அந்த நேரத்தில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மெல்ல அந்தப் பிரச்னை சரியானது. தற்போது குஜராத், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏடிஎம்களில் போதிய அளவில் பணம் இல்லை. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை பெரிய அளவில் பாதிப்பில்லை என்றாலும் வேலூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் பணத்தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. பெரும்பாலான ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள், தங்களின் பணத்தை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். பணத்தட்டுப்பாடு நிலவுவதை அறிந்த மற்ற மாவட்ட மக்களும் தங்களுக்கு தேவையான பணத்தை ஏடிஎம்களில் இருந்து முன்னெச்சரிக்கையாக எடுத்து வருகின்றனர். இதனால் மேலும் பணத்தட்டுப்பாடு ஏற்பாடு என்றும் கூறப்படுகிறது.