ஆம்ஸ்ட்ராங் - இயக்குநர் பா.ரஞ்சித் முகநூல்
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டம்: இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு!

ஜெ.அன்பரசன்

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சம்பவத்தில், உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என்பதை கண்டிக்கும் விதமாக பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நேற்று மாலை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன், ஆம்ஸ்ட்ராங் மனைவி திருமதி ஆம்ஸ்ட்ராங், திரைப்பட இயக்குநர்கள் பா ரஞ்சித், கதிர் உள்பட 1500 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1500 பேர்மீது வழக்குப்பதிவு..

இந்த நிலையில், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி திருமதி ஆம்ஸ்ட்ராங், திரைப்பட இயக்குநர்கள் ரஞ்சித், கதிர் உட்பட மொத்தம் 1500 கட்சி நிர்வாகிகள் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங்

சட்டவிரோதமாக கூடுதல், மாநகர காவல் சட்டம் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.