தமிழ்நாடு

"இனி வழக்கறிஞர்களுக்கு வழக்கு பட்டியல் அச்சிட்டு வழங்கப்படாது"- நீதிபதிகள் கூட்டத்தில் முடிவு

"இனி வழக்கறிஞர்களுக்கு வழக்கு பட்டியல் அச்சிட்டு வழங்கப்படாது"- நீதிபதிகள் கூட்டத்தில் முடிவு

jagadeesh

சென்னை உயர் நீதிமன்றத்தில் தினசரி வழக்கு விசாரணை பட்டியலை அச்சிட்டு வழக்கறிஞர்களுக்கு வழங்குவதை நிறுத்துவதாக அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், அரசு அச்சகத்தில் அச்சிட்டு வழக்கறிஞர்களுக்கு வழங்கி வந்த நடைமுறை நிறுத்தப்படுவதாக நீதித்துறை பதிவாளர் ஜோதிராமன் அறிவித்துள்ளார். காகித பயன்பாட்டால் ஏற்படும் செலவீனங்களை குறைக்கும் வகையில் நடவடிக்கை என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், மெட்ராஸ் பார் அசோசியேசன், பெண் வழக்கறிஞர் சங்கம், லா அசோசியேசன் ஆகியவற்றிற்கு உயர் நீதிமன்றம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஜனவரி ஒன்றாம் தேதி முதல் வழக்கறிஞர்களுக்கு அச்சிடுவதில்லை எனவும், இந்த நான்கு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கு மட்டும் தலா 2 நகல்கள் அனுப்பப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.