திருப்பதி கோயிலுக்கு சென்றிருந்த யூட்யூபர் டிடிஎஃப் வாசன், பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்த பகுதியில் கேட்டை திறந்துவிடுவது போன்று பிராங்க் செய்து வீடியோ வெளியிட்டிருந்தார்.
கோயிலில் இவ்வாறு வீடியோ எடுத்ததற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தரிசன வரிசைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர், திருமலை காவல் நிலையத்தில் வாசன் மீது புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் டிடிஃப் வாசன் மீது மத உணர்வுகள், மத நம்பிக்கைகளை புண்படுத்துதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.