பள்ளி விடுதியில் மாணவர்களை சாக்கடை அள்ள வைத்த விவகாரத்தில், விடுதி நிர்வாகம் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கிழக்கு தாம்பரத்தில் கார்லி மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு சொந்தமான விடுதியில், மாணவர்கள் 6 பேரை கடந்த மாதம் 24ஆம் தேதி அன்று சாக்கடை சுத்தம் செய்ய வைத்ததாக புகார் எழுந்தது. அத்துடன் விடுதி மாணவர்கள் சாக்கடையை சுத்தம் செய்யும் காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் பரவியது. இதனையடுத்து கார்லி பள்ளியின் விடுதியில், மாவட்ட குழந்தை நல குழுமத்தின் சார்பில் ஆய்வு செய்யப்பட்டது.
அதன் பிறகு சேலையூர் காவல்நிலையத்தில் பள்ளியின் விடுதி நிர்வாகம் மீதும், சிறுவர்களை சாக்கடை அள்ள சொன்ன விடுதிக் காப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நலகுழுமத் தலைவர் மணிகண்டன் அளித்த இப்புகாரின் பேரில், சிறார் நீதி சட்டத்தின் கீழ் மூன்று பிரிவுகளில் தற்போது கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.