ஏடிஎம்மில் பணத்தை நிரப்பிய பின் ஏடிஎம் இயந்திரத்தின் சாவியை ஊழியர்கள் அங்கேயே விட்டுச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
நாமக்கல் சேலம் சாலையில் உள்ள கே.எஸ். திரையரங்கு அருகில் கரூர் வைசியா வங்கியின் ஏடிஎம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ஊழியர்கள், ஏடிஎம்மில் பணத்தை நிரப்பியுள்ளனர். பணத்தை நிரப்பி முடித்தபின் இயந்திரத்தை பூட்டாமல், இயந்திரத்திலேயே சாவியை அவர்கள் வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.
பின்னர் வங்கியில் பணம் எடுக்க வந்த ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தில் சாவி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க அங்கு வந்த போலீசார் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்ப வந்த ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு, பின்னர் எச்சரித்து ஏடிஎம் இயந்திரத்தின் சாவியை அளித்தனர்.
தீபாவளி பண்டிகை என்பதால் ஏடிஎம் இயந்திரத்தில் வழக்கத்தை விட அதிகமாக பணத்தை நிரப்பியும், அதனை பூட்டாமல் ஏடிஎம் இயந்திரத்திலேயே சாவியை வைத்துவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.