duraimurugan pt desk
தமிழ்நாடு

``மேகதாதுவில் அணை கட்ட வேண்டுமென்று கர்நாடகா சொல்லுவது அவர்களின் ஆசை; ஆனால்..`` - துரைமுருகன் பேட்டி

webteam

வேலூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலத்துக்கு உட்பட்ட கலிஞ்சூர் ஏரி, தாரா படவேடு ஏரிகளை சுற்றுலா மையமாக மாற்ற மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும். காட்பாடியில் உள்ள தமிழக அரசின் உள் விளையாட்டு அரங்கத்தையும் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடக அரசு கூறி இருப்பது குறித்து கேட்டதற்கு பதிலளித்த அவர்...

cauvery

மேகதாதுவில் அணையை கட்டுவோம் என்பது கர்நாடகா அரசின் ஆசை. ஆனால், அணையை கட்டக் கூடாது என சொல்வதற்கான உரிமை நமக்குண்டு. காரணம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் கபினிக்கு கீழே 80 டிஎம்சி தண்ணீர் இயற்கையாக நமக்கு வருகிறது. இயற்கையாக வரும் இடத்தில் அணையை கட்டுவது என்பது உகந்ததல்ல.

இரண்டாவது அவர்கள் அணையை கட்டிட முடியாது, காரணம் மத்திய நீர் மேலாண்மை வாரியம் இதற்கு அனுமதி கொடுக்க வேண்டும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்க வேண்டும், பிறகு வனத் துறையினர் அனுமதி அளிக்க வேண்டும், இதற்குப் பிறகும் கட்ட வேண்டியிருந்தால் நீதிமன்றம் செல்ல வேண்டும். இப்படி பல விஷயங்கள் உள்ளது.

அரசியலுக்காக அவர்கள் கட்டிய தீருவோம் என்பார்கள் நாங்கள் கட்ட விட மாட்டோம் என்போம். இதை நீங்கள் அணை கட்ட விடமாட்டோம் என துரைமுருகன் உறுதி என தலைப்புச் செய்தியாக போடுவீர்கள் அவ்வளவுதான். அணை கட்ட முடியாது அதனை கட்ட நாங்கள் விட மாட்டோம் அதிமுக ஆட்சியில் கனிம வளத்தில் சுமார் 1300 கோடி வரை நஷ்டம் ஏற்படுத்தினார்கள் நாங்கள் அதை நிரப்பி தற்போது 1600 கோடி ரூபாய் லாபத்தை காட்டியிருக்கிறோம். அதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் கனிம வளம் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது`` என்று.

duraimurugan

திமுக அரசு அறிவித்த பெண்களுக்கான ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பல பெண்களுக்கு கிடைக்க வாய்ப்பிலை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது குறித்து கேட்டதற்கு, யாருக்கு கிடைக்க வாய்ப்பில்லை என எழுதி கொடுக்கச் சொல்லுங்கள் அதை நான் கவனிக்கிறேன், எதிர்க்கட்சிகள் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள் அதை நீங்களும் கேள்வியாக கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதேபோல பாலாற்றில் குகைநல்லூர் அரும்பருதி பொய்கை கோவிந்தம்பாடி பரமசாத்து உள்ளிட்ட பல இடங்களில் செக் டேம் கட்டி வருவதாகவும் தெரிவித்தார்.