தமிழ்நாடு

“பைக் சாவியை போலீஸ் பிடுங்கலாமா ?” - ஆர்.டி.ஐயில் கிடைத்த விளக்கம்

“பைக் சாவியை போலீஸ் பிடுங்கலாமா ?” - ஆர்.டி.ஐயில் கிடைத்த விளக்கம்

webteam

காவல்துறையினர் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வண்டிகளின் சாவிகளை பிடுங்கலாமா ? என்ற கேள்விக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் பரமசிவன். இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், போக்குவரத்து தொடர்பான பல கேள்விகளை முன்வைத்திருந்தார். இந்தக் கேள்விகளுக்கு மதுரை காவல்துறை சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில கேள்விகளையும், பதில்களையும் காணலாம்.

கேள்வி : வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய போக்குவரத்து காவலரை தவிர யாருக்கு அதிகாரம் உள்ளது ?

பதில் : பொது பாதையில் செல்லும் வாகனத்தை சீருடையில் உள்ள அனைத்து காவலர்களும் சோதனை செய்ய உரிய ஆவணங்களைக் கேட்கலாம்.

கேள்வி : போலீஸ் கைகாட்டியும் வாகனத்தை நிறுத்தவில்லை என்றால் காவல்துறையினர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் ?

பதில் : காவலர் கை காட்டி வண்டியை நிறுத்தாமல் இருந்தால் மோட்டார் வாகன சட்டப்படி பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி : காவலர்கள் வண்டி சாவியை பிடுங்கலாமா ?

பதில் : இதுபோன்ற வார்த்தைகள் மோட்டார் வாகன சட்டத்தில் இல்லை. 

கேள்வி : நடுரோட்டில் உரிமையாளரிடமிருந்து  வண்டியை காவலர்கள் பரித்து வர முடியுமா ?

பதில் : யூகங்களின் அடிப்படையில் கேட்கும் கேள்விகளுக்கு தகவல் அளிக்க இயலாது.

கேள்வி : லைசன்ஸ் என்னென்ன குற்றங்களுக்கு போலீஸ் பறிமுதல் செய்ய முடியும் ?

பதில் : அதிவேகம் (Over Speed), சிக்னலில் நிக்காமல் செல்வது (Signal Jumping), மதுபோதையில் வாகனம் ஓட்டுவது (Drunken Drive), அதிக சுமை ஏற்றிச்செல்வது.