தமிழ்நாடு

கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் சூடுபிடித்த மாடு விற்பனை

கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் சூடுபிடித்த மாடு விற்பனை

webteam

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய மத்திய அரசு விதித்த கட்டுப்பாடுகளுக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளதால் வாரச்சந்தையில் மாடுகள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்டுரோட்டில் வாரந்தோறும் நடைபெறும் சந்தையில் ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி மற்றும் கேரள பகுதிகளிலிருந்தும் வந்து மாடுகளை வாங்கிச் செல்கின்றனர். பொதுவாக, இந்த சந்தையில் வாரந்தோறும் ஒன்றரை கோடி ரூபாய்க்கும் மேல் மாடுகள் விற்பனை நடைபெற்று வந்த நிலையில், மாடுகளை வாங்கவும், விற்கவும் மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. இதையடுத்து மாட்டுச் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது உயர்நீதிமன்றத் தீர்ப்பால் தடை நீக்கப்பட்டுள்ளது. அதை உச்சநீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே மாட்டுச் சந்தை மீண்டும் களை கட்டியுள்ளது. அதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.