தமிழ்நாடு

பஸ் ஸ்டிரைக்: ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்

webteam

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் அதிகளவில் ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  
அரசு அறிவித்த ஊதிய உயர்வை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நேற்று தொடங்கிய இந்தப் போராட்டம் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. பேருந்து இயக்கப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை ஏற்று அரசு பிரச்னைக்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பணிக்குத் திரும்பவில்லை என்றால் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில் தினமும் அலுவலகம், பள்ளி, கல்லூரி, வெளி ஊர்களுக்கு செல்வோர் ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூரில் ஊழியர்களின் போராட்டம் காரணமாக பெரும்பாலான பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.இதனா‌ல் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பயணிகள் குவிய தொடங்கியதால் நெரிசல் ஏற்பட்டது. மேலும் பொதுமக்களின் தேவை உணர்ந்து அரசு உடனடியாக பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.