தமிழ்நாடு

கனமழையில் சாய்ந்து விழுந்த மின்கம்பங்கள்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வெளிமாநிலத்தவர்கள்

கனமழையில் சாய்ந்து விழுந்த மின்கம்பங்கள்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வெளிமாநிலத்தவர்கள்

webteam

திருநெல்வேலி மாவட்டத்தில் மின்கம்பங்கள்‌ சாய்ந்து விழுந்ததில் வெளி மாநிலத்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே திருப்பூர் குமரன் நகரில் கேபிள் பதிக்கும் வே‌‌லைக்காக வெளிமாநிலத்தில் இருந்து வந்த ‌10க்கும் மேற்‌பட்ட குடும்பத்தினர் கொட்டகையில் தங்கியுள்‌ளனர். இந்நிலையில் கொட்டகையின் மீது 3 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. கனமழை காரண‌மாக அருகில் உள்ள கட்டடத்தில்‌ தஞ்சம் புகுந்ததால் 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உயிர்‌ தப்பின.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையின் காரணமாக ரயில்வே பீடர் சாலை குறுக்குத் தெருவில் 3 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இந்த 3 மின்கம்பங்களும் டிராஸ்பர்மருக்கு செல்லக்கூடிய ஹெச்.டி.லயன் ஆகும். சாய்ந்து விழுந்த மின்கம்பங்கள் மின்கம்பங்களிலிருந்து மின்சார‌ம் தானாகவே துண்டிக்கப்பட்டதால், நிகழவிருந்த பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் வீடுகளின் மேற்கூரை மீது வயர்கள் விழுந்து கிடந்தன. சம்பவ இடத்திற்கு மின்வாரியத்தினர் விரைந்து சென்று பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.