தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 61 அணிகள் பங்கேற்ற ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
தூத்துக்குடி விளாத்திகுளத்தில் நடந்த ரேக்லா ரேஸ் பந்தயத்தில் 14 கிலோ தூரம் கொண்ட சிறிய மாட்டு வண்டிகளுக்கான போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் குறுக்கசாலையை சேர்ந்த பிரியதர்ஷினி அணி முதலிடம் பிடித்தது. 12 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பூஞ்சிட்டு மாட்டு வண்டிப் போட்டியில் நாலாந்தாவைச் சேர்ந்த உதயபாண்டியன் வெற்றி பெற்றார். பெரிய மாட்டு வண்டிகளுக்கான போட்டியில் நெல்லை மாவட்டம் மறுகால்குறிச்சியை கருப்பசாமி வெற்றி பெற்றார்.