தமிழ்நாடு

சீறிவந்த காளைகள் சினம்கொண்டு அடக்கிய காளையர்: ஒசூர் அருகே நடைபெற்ற எருதுவிடும் விழா

சீறிவந்த காளைகள் சினம்கொண்டு அடக்கிய காளையர்: ஒசூர் அருகே நடைபெற்ற எருதுவிடும் விழா

kaleelrahman

ஓசூர் அருகே நடைபெற்ற பாரம்பரிய எருதுவிடும் விழாவில் 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள வெங்கடரமணா கோவில் திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற எருதுவிடும் விழாவில் 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. தமிழகம் மட்டுமல்லாது, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வந்த காளைகள் சீறிப் பாய்ந்தன. இந்த காளைகளை அடக்குவதற்கு 400-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

எருதுகளை போட்டிப் போட்டுக்கொண்டு அடக்கிய வீரர்கள் தங்களது வீரத்தை வெளிப்படுத்தினர். பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் பங்கேற்ற இந்த விழாவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாடுகள் முட்டி காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். பேரிகை போலீசார் அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.