தவெக விஜய் முகநூல்
தமிழ்நாடு

"5 நாட்களுக்குள் யானை சின்னத்தை நீக்காவிட்டால்..." - தவெக விஜய்க்கு பறந்த வக்கீல் நோட்டீஸ்!

தமிழக வெற்றிக் கழகம் கொடியில் இருந்து 5 நாட்களுக்குள் யானை சின்னத்தை நீக்காவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

PT WEB

தமிழக வெற்றிக் கழகம் கொடியில் இருந்து 5 நாட்களுக்குள் யானை சின்னத்தை நீக்காவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் அளிக்கப்பட்டுள்ள நோட்டீஸில் தேசிய கட்சியான பகுஜன் சமாஜுக்கு தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்ட சின்னத்தை தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியில் சட்டவிரோதமாக பயன்படுத்தி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இருந்தே யானை சின்னத்தை நீக்க அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என தாங்கள் ஆட்சேபம் தெரிவித்த பிறகும் கூட அதை அகற்றவில்லை என நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் கொடியில் இருந்து 5 நாட்களுக்குள் யானை சின்னத்தை எடுக்காவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.