தமிழ்நாடு

விடுமுறைகளின் எதிரொலி: கறிக்கோழி விலை உயர்வு!

விடுமுறைகளின் எதிரொலி: கறிக்கோழி விலை உயர்வு!

webteam

நாமக்கல்லில் கறிக்கோழியின் விலை ஒரு கிலோ 20 ரூபாய் உயர்ந்து 74 ரூபாயாக நிர்யணம் செய்யப்பட்டுள்ளது. 

நாமக்கல் மண்டலத்தில் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர், கறிக்கோழி உயிருடன் 54 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நாள்தோறும் உயிர்க்கோழி கிலோவுக்கு ஐந்து ரூபாய் வீதம் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் 20 ரூபாய் உயர்ந்து 74 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஈஸ்டர் பண்டிகை முடிவடைந்துவிட்டதாலும், கேரளாவிற்கு அனுப்பப்படும் கோழியின் அளவு அதிகரித்துள்ளதாலும் உயிர்க்கோழியின் விலை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வரும் நாட்களில் விலை மேலும் உயரக்கூடும் என்று நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.