தமிழ்நாடு

கோடை தொடங்கியதால் எகிறியது கறிக்கோழி விலை !

கோடை தொடங்கியதால் எகிறியது கறிக்கோழி விலை !

webteam

கடந்த 15 நாட்களுக்கு முன்பு கறிக்கோழி விலை 79 ரூபாய்க்கு விற்று வந்தது. இந்நிலையில் கடந்த 14 நாட்களில் 25 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் 26-ம் தேதி கிலோ ஒன்று 79 ரூபாயிலிருந்து 3 ருபாய் உயர்ந்து 82 ரூபாயாகவும் உயர்ந்தது, இதனை தொடர்ந்து 27 –ம் தேதி 2 ரூபாயும் 29,30 ஆகிய 2 நாட்களும் தினசரி கிலோ ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்ந்து 90 ரூபாயாக  இருந்த நிலையில் கடந்த 3-ம் தேதி 4 ரூபாயும் 4-ம் தேதி 5 ரூபாயும், 5-ம் தேதி 5 ரூபாயும் , நேற்று 3 ரூபாயும் விலை உயர்ந்து கிலோ ஒன்று 104 ரூபாயாக்கு உயிருடன் விற்பனை செய்யப்படுகிறது. 

விலை உயர்வு குறித்து கறிக்கோழி பண்ணையாளர்கள் கூறும் போது, கடந்த 15 நாட்களுக்கு மேலாக கறிக்கோழி உயிருடன் கிலோ 70 ரூபாய் முதல் 80 ரூபாய்க்கு விற்று வந்தது. இந்நிலையில் தற்போது கோடையை ஒட்டி தண்ணீர் பிரச்னை, வெயில் காரணமாக உற்பத்தி குறைந்த நிலையில் விற்பனையும் அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. கறி விலை 150 ரூபாய் முதல் 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுதாகவும், மீன் பிடி தடை காலம், கோடை விடுமுறையை ஒட்டி விற்பனையும் அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாகவும், விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்