சேலத்தில் நாளை நடைபெறும் சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள உள்ளவர்களுக்கு வீடுவீடாக சென்று பூத் சிலிப் வழங்கப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் உள்ள ஆயிரத்து 235 வாக்குச்சாவடி மையங்கள் உட்பட ஆயிரத்து 356 இடங்களில் நாளை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அதில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. அதனால், 18 வயதை கடந்த அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தும் வகையில், வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஊரிலும் ஒலிப்பெருக்கி மூலம் தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆய்வு செய்தார்.