மாஞ்சோலையைச் சேர்ந்த தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
அந்த வழக்கு விசாரணையின் போது, தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய வாழ்வாதாரம் வழங்காமல் அவர்களை கீழே இறக்கக்கூடாது என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து பல்வேறு கட்சியினர் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
தற்போது மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் யாரும் வெளியேற வேண்டாம் என அதனை நிர்வகிக்கும் பாம்பே பர்மா டிரேடிங் நிறுவனம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் மறு அறிவிப்பு வரும் வரை மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அவர்களது வீடுகளில் தங்கிக் கொள்ளலாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் “75 விழுக்காடு கருணைத் தொகை நாகர்கோவில் உதவி தொழிலாளர் ஆணையரிடம் டெபாசிட் செய்யப்படும்” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.