முதலமைச்சர் ஸ்டாலின்  கோப்புப்படம்
தமிழ்நாடு

முதலமைச்சர் ஸ்டாலின் பயணித்த விமானத்தில் வெடிகுண்டு உள்ளதென வந்த மின்னஞ்சல்; பதற்றமடைந்த அதிகாரிகள்!

முதலமைச்சர் ஸ்டாலின் பயணித்த விமானத்தில் வெடிகுண்டு இருந்ததாக மிரட்டல் மின்னஞ்சல் வந்த நிலையில், அது வதந்தி என்று விமானம் தரை இறங்கிய பின்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மொத்தம் 17 நாட்கள் அங்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

முதலமைச்சரின் பயணத்திற்கான முன்னேற்பாடு பணிகளை கவனிக்கும் வகையில் தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, தொழிற்துறை மற்றும் தமிழ்நாடு Guidance அமைப்பின் அதிகாரிகள் ஏற்கெனவே அமெரிக்கா புறப்பட்டுச் சென்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் உலகின் முன்னணி நிறுவன தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.

திட்டத்தின்படி நேற்று (27.08.2024) விமானம் மூலமாக துபாய் வழியாக அமெரிக்க புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின். அப்போது அவர் சென்றிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக, மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்திருக்கிறது.

இந்த மின்னஞ்சலை அதிகாரிகள், விமானம் புறப்பட்ட பிறகே கவனித்துள்ளனர். அதன்பிறகாக, விமானம் துபாயில் தரை இறங்கும் வரை (4 மணி நேரமாக) உச்சக்கட்ட பதற்றத்துடனே அதிகாரிகள் இருந்திருக்கிறார்கள்.

#JUSTIN | முதல்வர் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

முன்கூட்டியே விமானம் முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது என்றாலும், திடீரென இந்த மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே நேற்றைய தினம் பார்சல் ஒன்று கேட்பார் அற்று கிடந்ததும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

இந்நிலையில், விமானம் மூலம் முதலமைச்சர் நல்ல முறையாக தரையிறங்கிய பிறகே வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்த வெடிக்குண்டு மிரட்டல் விடுத்தது யார் என்று காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.