தமிழ்நாடு

போகி கொண்டாடிய சிறார்கள்.... புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதி

போகி கொண்டாடிய சிறார்கள்.... புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதி

webteam

தமிழகத்தில் போகி பண்டிகையையொட்டி தேவையற்ற பொருட்கள் எரிக்கப்பட்டதால் கடுமையான புகைமூட்டம் ஏற்பட்டது.

தலைநகர் சென்னையில் அதிகாலையிலேயே வீதிகளில் குவிந்த சிறார்கள், மேளம் அடித்தவாறே பழைய பொருட்களை தீயிலிட்டு கொளுத்தினர். மேலும் பல்வேறு பகுதிகளில் பொருட்கள் எரிக்கப்பட்டதால் சென்னையை கடுமையான புகைமூட்டம் சூழ்ந்தது. இதனால் சாலைகளில் வெளிச்சம் இல்லாததால் சிரமத்திற்கு ஆளான வாகன ஓட்டிகள், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

பனிப்பொழிவு கடந்த சில வாரங்களாக நீடிக்கும் சூழலில், புகைமூட்டமும் ஏற்பட்டதால் காலைநேரத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணாக்கர்கள், அலுவலகம் செல்வோர் கடுமையான அவதிக்குள்ளாகினர். சென்னை நோக்கி வந்த ரயில்கள் அனைத்தும் நகரப்பகுதிக்குள் மெதுவாக இயக்கப்பட்டன. வர்தா புயலுக்கு கீழேவிழுந்த மரங்களின் கழிவுகள் அதிகமாக எரிக்கப்பட்டதே புகைமூட்டம் அதிகரிக்க காரணம் என கூறப்படுகிறது.