தமிழ்நாடு

ரஷ்யா உதவியுடன் ப்ளுவேல் கேமை தடுக்க நடவடிக்கை

ரஷ்யா உதவியுடன் ப்ளுவேல் கேமை தடுக்க நடவடிக்கை

rajakannan

ரஷ்ய அரசுடன் தூதரக ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தி ப்ளுவேல் விளையாட்டை முடக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

ப்ளுவேல் இணையதள விளையாட்டில் மாணவர் விக்னேஷ் உயிரிழந்ததை அடுத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இவ்விவகாரத்தை தானாக முன்வந்து விசாரித்தது. 

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, GOOGLE, FACEBOOK உள்ளிட்ட சமூக தளங்கள் மத்திய அரசின் விதிகளுக்கு உட்படும் வகையில் சட்டம் இயற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரி முருகன் மேற்பார்வையில் குழு அமைத்து, வலைதளங்களில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டனர். மேலும், மாவட்ட மற்றும் தாலுகா அளவில் சமூக ஆர்வலர்கள், உளவியலாளர்களைக் கொண்ட கண்காணிப்புக்குழுக்களை அமைக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.