தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 13 பேர் கொண்ட சிறப்பு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவலால் ஏற்கெனவே மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில், கருப்பு பூஞ்சை நோய் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பூஞ்சை நோய்கள் 1857-களிலேயே கண்டறியப்பட்ட பழைய நோய்தான் என்றாலும் கொரோனா இரண்டாவது அலையில் இந்நோயின் தாக்கம் அதிகரித்திருப்பதாக மருத்துவத் துறை தெரிவிக்கிறது.
தொடக்கத்திலேயே கண்டறியப்பட்டால் இது குணப்படுத்தக்கூடிய நோய்தான் என்கின்றார், காது, மூக்கு மற்றும் தொண்டை நிபுணர் மோகன் காமேஸ்வர்.