தமிழ்நாடு

கோட்சே ஆதரவு; 8 ஓட்டுகள் என வதந்தி - 134 வது வார்டில் பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி

கோட்சே ஆதரவு; 8 ஓட்டுகள் என வதந்தி - 134 வது வார்டில் பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி

கலிலுல்லா

சென்னை மாநகராட்சியின் 134வது வார்டில் பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார்.

சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலம் மேற்கு மாம்பலம் 134 வது வார்டில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டவர் உமா ஆனந்தன். இந்த வார்டில் முதல் சுற்றில் உமா ஆனந்தனின் வாக்கு எண்ணிக்கை தவறாக (குறைவாக) சொல்லப்படுவதாக கூறி பாஜக பிரமுகர்கள் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர் 8 ஓட்டுகளை மட்டுமே பெற்றதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து 5539 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

உமா ஆனந்தனை பொறுத்தவரை அவர் சர்ச்சைக்கு பெயர் போனவர். முன்னதாக அவர் பேசிய காணொலி ஒன்றில், ''கோட்சே காந்தியை சுட்டார். ஆமாம், கோட்சே இந்து. அதனால் தான் பெருமையாக இருக்கு. நான் கோட்சேவின் ஆதரவாளர். கோட்சே வந்து தாமதமாக பண்ணினார். இன்னும் யாராவது ரோசமாக இருந்திருந்தால் முன்னாடியே யாராவது பண்ணி இருப்பாங்க ” என வெளிப்படையாக தன்னை கோட்சேவின் ஆதரவாளர் எனத் தெரிவித்து கொண்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அவருக்கு பாஜகவில் சீட்டு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.