செய்தியாளர்: ராஜன்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில் கடந்த 22 ஆம் தேதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து இந்தியா கூட்டணி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
கனிமொழி எம்பி கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் கூட்டத்தில் பேசிய, “அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சேலம் மாநாட்டில் பிரதமர் மோடி காமராஜர் அவர்களை பற்றி புகழ்ந்து பேசினார். காமராஜருக்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம்” என்று கேள்வி எழுப்பினார்.
அத்துடன், டெல்லி காமராஜர் இருந்த போது அவரை உயிரோடு கொளுத்தி கொல்ல நினைத்தவர்கள் தானே என்று கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார். அனிதா ராதாகிருஷ்ணன் இந்த பேச்சில் பயன்படுத்திய ஒரு வார்த்தை எடுத்துக் கொண்டு பாஜக வைரல் ஆக்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய வீடியோ வைரலான நிலையில், மோடியை அருவருக்கத்தக்க வகையில் பேசியதாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் ஆகியவை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.