பாஜக வேட்பாளர்கள் ட்விட்டர்
தமிழ்நாடு

’போருக்கு நாங்க ரெடி’ - கோவையில் அண்ணாமலை To நீலகிரியில் எல்.முருகன்; வெளியானது பாஜவின் மெகா லிஸ்ட்!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் 9 பேர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Prakash J

தமிழகத்தில் பாஜக தொகுதிப் பங்கீடு நிறைவு!

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வேலைகள் வேகம்பிடித்து வருகின்றன. முதல்கட்டமாக தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதையொட்டி, தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. அதற்காக தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீடுகளைப் பிரித்துவருகின்றன.

அந்த வகையில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி ஆகியவற்றில் இடம்பிடித்துள்ள கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு நிறைவு பெற்றுள்ளன. இன்று நிறைவடைந்த பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள த.மா.காவுக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதேநேரத்தில், பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒரு தொகுதிகூட ஒதுக்கப்படவில்லை. தொடர்ந்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று 39 இடங்களுக்கான கூட்டணி தொகுதிப் பங்கீடுகளையும் அறிவித்தார்.

இதையும் படிக்க: ஓபிஎஸ்க்கு அல்வா கொடுத்த அண்ணாமலை! ஒரு சீட் கூட இல்லை; முடிவுக்குவந்தது பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு!

20 இடங்களில் பாஜக போட்டி: 9 வேட்பாளர்கள் அறிவிப்பு!

அந்தவகையில், பாஜக நேரிடையாக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதைத் தவிர கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாமவுக்கு 20, அமமுகவுக்கு 2, த.மா.காவுக்கு 3 எனவும், புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதி எனவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 4 கட்சிகள் நேரிடையாக தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன.

இந்த நிலையில், பாஜகவின் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, கோயம்புத்தூரில் போட்டியிடுகிறார். இதுதவிர பாஜகவில் போட்டியிடும் 8 வேட்பாளர்களின் விவரம் பற்றி இங்கு பார்ப்போம்.

தென்சென்னை - தமிழிசை சௌந்தரராஜன்

மத்திய சென்னை - வினோத் பி செல்வம்

வேலூர் - ஏ.சி.சண்முகம் (கூட்டணி)

கிருஷ்ணகிரி - நரசிம்மன்

நீலகிரி - எல்.முருகன்

பெரம்பலூர் - பாரிவேந்தர் (கூட்டணி)

தூத்துக்குடி - நைனார் நாகேந்திரன்

கன்னியாகுமரி - பொன் ராதாகிருஷ்ணன்

இதையும் படிக்க: AIமூலம் எடிட்; வைரலான இத்தாலி பெண் பிரதமரின் ஆபாச டீப்பேக் வீடியோ! 100000 யூரோ நஷ்டஈடு கேட்டு வழக்கு

இந்த பட்டியல் வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே வேட்பாளர் பட்டியலில் மாற்றம் என்ற அறிவிப்பு வெளியானது. முதலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் நெல்லை தொகுதியில் போட்டியிடுவார் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புதிய தலைமுறைக்கு பேசிய நயினார் நாகேந்திரன், ‘இது வெறும் டைப்பிங் மிஸ்டேக் தான். எந்த குழப்பமும் இல்லை’ என்று விளக்கம் கொடுத்தார்.