கர்நாடக மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் கோழிப்பண்ணைகளிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
கர்நாடகாவிலிருந்து தமிழகம் வரும் வாகனங்களுக்கு மாநில எல்லையில் தொற்று நோய் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. இதே போல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகள், முட்டைகள், தீவன மூலப்பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கும் நோய் தடுப்பு மருந்துகள் தெளிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
பண்ணைகளில் உள்ள கோழிகளின் இறப்பு அளவு அதிகரித்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குனர் சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.