தமிழ்நாடு

அரசு மருத்துவமனைகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு

அரசு மருத்துவமனைகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு

webteam

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பயோ மெட்ரிக் வருகைப்பதிவிற்கான அரசாணையை 4 மாதத்திற்குள் நடைமுறைப்படுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை, கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பணிக்கு வந்து செல்லும் நேரத்தையும், வருகையையும் உறுதிப்படுத்தும் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு நடைமுறையில் இல்லாததால் மருத்துவர்கள் பணிக்கு தாமதமாக வருவதும், தேவைப்படும் நேரத்திற்கு வெளியே ‌செல்வதும் நடப்பதாகக் தெரிவித்திருந்தார்.

அந்த மனுவில் கடந்த 2012ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணைப்படி, தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பயோமெட்ரிக் முறையை அமல்படுத்த உத்தரவிட வேண்‌டும் என கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் செ‌ல்வம் மற்றும் கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 4‌ மாதங்களில் அனைத்து மருத்துவமனைகளிலும் பயோமெட்ரிக் முறையை அமல்படுத்த சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.