தமிழ்நாடு

அப்துல் கலாம் சிலை அருகே குரான், பைபிள்

அப்துல் கலாம் சிலை அருகே குரான், பைபிள்

webteam

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சிலையின் அருகே குரான், பைபிள் நூல்களை கலாமின் பேரன் வைத்தார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 2 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் அப்துல் கலாமின் மணிமண்டபம் கடந்த 27 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. பேக்கரும்பில் அமைக்கப்பட்ட மணி மண்டபத்தில் வீணை மீட்டுவது போன்ற கலாம் சிலை வைக்கப்பட்டு இருந்தது. சிலை முன்பு பகவத் கீதை நூலும் வைக்கப்பட்டிருந்தது. அப்துல் கலாம் சிலை முன்பு பகவத் கீதை நூல் மட்டும் வைக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், கலாம் சிலையின் அருகே தற்போது குரான், பைபிள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பேசிய கலாமின் பேரன் சலீம் கூறியதாவது, அப்துல்கலாம் அனைவருக்கும் பொதுவானவர் என்றும், எனவே அவரது சிலைக்குகீழ் பைபிள், பகவத்கீதை, குரான் ஆகியவை வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.