தமிழ்நாடு

சர்க்கரை ஜாக்கிரதை: இன்று உலக நீரிழிவு நோய் தினம்!

சர்க்கரை ஜாக்கிரதை: இன்று உலக நீரிழிவு நோய் தினம்!

webteam

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதி உலக நீரிழிவு தினமாக கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பெண்களுக்கான நீரிழிவு தினமாக கடைப்பிடிக்கப்படுவதாக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் காரணத்தை தெரிந்து கொள்வோம்.

நீரிழிவு நோயை குணப்படுத்துவதற்கான இன்சுலின் மருந்தை கண்டுபிடித்தவர் பிரெட்ரிக் பேண்டிங். இவரை கவுரப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி உலக நீரிழிவு நோய் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இம்முறை பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இன்று பெண்களுக்கான நீரிழிவு நோய் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. காரணம், பெண்களுக்கு ஏற்படும் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகமிருப்பதே ஆகும். அதே போல் கர்ப்பகால நீரிழிவு நோயின் தாக்கமும் பெருமளவில் அதிகரித்துள்ளது. 

கர்ப்பகால நீரிழிவு நோய் ஏற்பட காரணம்:

கர்பக்காலத்தில் சில பெண்களுக்கு  உடல் எடை அதிகமாக இருப்பதாலும், கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி காரணமாகவும், அவர்களுக்கு கூடுதல் இன்சுலின் தேவைப்படுகிறது. இதனால் அவர்கள் இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரித்து இந்த நீரிழிவு நோய் ஏற்படுகிறது. அதேசமயம் குழந்தை பிறந்ததும் இவர்களில் பலருக்கு நீரிழிவு நோய் இல்லாமல் போகவும் வாய்ப்புகள் அதிகம். 

தடுக்கும் வழிமுறைகள்:

சர்க்கரை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பெண்களைப் பொறுத்தவரை பூப்பெய்தும் காலம் முதலே முறையான உணவுப் பழக்கங்களையும், உடற்பயிற்சியையும் கடைபிடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இன்று முதல் பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தின் மீது அக்கறைகொண்டு கவனித்தால், அடுத்த வருடம் பெண்களுக்கான நீரிழிவு நோயின் தாக்கத்தை குறைக்க முடியும். வாழ்க்கையை இனிப்பாகவும் மாற்ற முடியும்.